தொடரும் கருச்சிதைவுகள்
இடைநிறுத்தி
உன் நிமிடங்களின் அவசரத்தோடு
குருதி வாசம் மேலெழ
என் அன்பின் உணர்வுகள் பிரசவிக்கிறேன்
மனப்பிறழ்வின் பிதற்றலென
இரக்கத்தின் அமிலம் தெளித்து
மௌனமாய்
எழுந்து
விலகி
என் விழிதிசை நடக்கிறாய்
வெறும் அழகியல் வெளிப்பாடுகளோடு
பிணமான குழந்தைகளின்
விரல் நுனி காலிடற
உடல் கூசி உயிர் தகிக்கிறேன்
எதோ எல்லாம்
புதிதாய் நடப்பதாக.
Wednesday, December 26, 2007
உன் பதில் நோக்கிய பொழுதுகளில்
Posted by LakshmanaRaja at 4:16 AM 5 comments
Labels: கவிதை
Tuesday, December 18, 2007
புரிதலின் மௌனங்கள்
என்னை உணர்ந்தும்
சூழலால் மௌனித்திருப்பதன்
உன் நியாயங்கள்..
அனைத்தும் அறிந்தும்
நான் உன் வார்த்தைகளுக்காய் காத்திருப்பதிலும் இருக்கிறது
அவசரமாயும் அவசியமாயும்
என்ன இருக்கிறது
உடன் பகிர
பிரிவின் வெறுமையை தவிர!
கழுத்தில்
அலுவலக அடையாளங்கள்....
கனம் தாளாது
தொங்கும் தலையை
யாரும் அப்படித்தான் அறிவார்கள்…
தனைஉணர யாருமற்ற வீதியில்
நேர்கொண்டு பார்க்க ஏதுமில்லை
நம் புரிதலின் முன்
விலகி நின்று
விளக்கிச்சொல்ல
ஏதுமின்றி தவிக்கிறது
கவிதை
Posted by LakshmanaRaja at 3:24 AM 6 comments
Labels: கவிதை
பனி மூடிய பாதையில் உறைகிறேன் நானும் ஒரு மரமாய்!
//குறிப்பு: என் தேவதையின் உணர்வை மொழிபெயர்த்திருக்கிறேன்//
பனிமூட
உயிர் உறையும்
நாட்களில் சவமாகி
அசைவற்ற மரமாகிறேன்!
பனி நீக்கி
உயிர் காத்திடும் காற்று
என் இலை உதிர்த்து
தன் வழிநோக்கி பயனிக்க
இனி ஒட்டயியலாது
என் வசந்தத்தின் சாட்சிகள்
விழிநீரில் மிதக்கிறது
உயிர்பெற்ற எனை பார்த்து
இருத்தலின்
கேள்விகள் எழுப்பியடி!
இலைஉதிர்ந்த
கனுக்கலின் வலியுணர்ந்த
சிறு பனிமேடுகளால்
யாரோ மருந்திட
காயங்கள் அழகாக
அழகானது மரம்
தன் கதிரின் வெம்மை தாளாது பனிவிலக
அந்த சூரியன் எதிர் பட்டவர்களிடம் வருத்தம் பகிர்ந்து
மேற்கு நோக்கி பயனிக்கிறது
தான் மரத்தின் அழகை ரசிக்கவே விரும்பியதாக!
இயல்புகளுக்கும் இயற்கைக்கும்
உள்ள தூரத்தில்
வாழ்கிறேன்
நான்
சில நேரங்களில் சூரியனாகவும்
ல நேரங்களில் சூரியனோடும்!
இறந்தகாலத்தின் வசந்தம்
நிகழ்காலத்தின் பனியும்
எதிர் காலத்திலும் உண்டென
அறிந்த மரத்திற்கு
தெரியும்
‘எல்லாம் கடந்து போகும்’ என்பது!
Posted by LakshmanaRaja at 2:21 AM 3 comments
Labels: கவிதை
Monday, December 10, 2007
தனிமையின் தழல்
எரியும் சிதை ஒன்று
உடல் இறுகி எழ
அடித்து அடக்க தடியுடன் பக்கம் நிற்கிறான் ஒருவன்
தீமூட்டிய கரங்களும்
உடனிருந்து வழிகாட்டிய கூட்டமும்
கலைய தொடங்கியது
அவன் உயிரோடிருப்பதாக
நான் மட்டும் உரத்த குரலோடு
உண்மையை எழுப்புகிறேன்
இறந்தவன் பேசுவதான பயத்தோடு
கவனித்தும் திரும்ப மறுத்து
சலனமற்று வந்த வழி தொடரும் கூட்டத்தில்
தன் அடையாளம் மறைக்கும்
முயற்சியில் வளைகள் அவிழ்ந்து கீழ்விழ
நடையிடுகின்றது எரிமூட்டிய கரங்கள் !
தடியை உயர்த்தி காத்திருப்பவனுக்கு
பயம் ஏதுமில்லை என்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை.
Posted by LakshmanaRaja at 11:29 PM 4 comments
Labels: கவிதை
Tuesday, December 4, 2007
என் தேவதைக்காக
அச்சேறிய என் கவிதைக்குள்ளும்
துவ்வலின் நடுக்கங்கள் அறிகிறாய்
அதன் வார்த்தைகளில்
தனித்திருக்கும் கண்ணீரின் வலி அறிந்து
உள் நுழைந்து உயிர் வருடுகிறாய்!
என் தவங்களுக்கு
வரம் தர கடவுள் வரா
விடியலின் திசைநோக்கி விழிக்கும் நொடியில்
தேவதையாகி பக்கமர்ந்திருந்தாய்!
என் தவம் சொன்னதை நானும் வழிமொழிகிறேன்
நீ சுமந்த வரங்கள் தேவையில்லை
உன் அருகாமை போதுமென்று!
உன்னை பார்த்ததும் அதிகரிக்கும்
என் கண்ணீரை இன்றுவரை
நீ துடைத்ததில்லை!
ஆழமான உன் பார்வையில்
அது தானே அமைதியுறும் அர்த்தமுற்றதாய்!
என் உயிர் என சிலர் இருக்கிறார்கள்!
என் உயிர்
அதுவாக இருப்பதற்கான
காரணமாகவும் ஒரே சாட்சியாகவும் நீ மட்டும்!
Posted by LakshmanaRaja at 8:04 AM 3 comments
Labels: கவிதை
Monday, December 3, 2007
நானும் அந்த மேடையில்!
நாடகம் பார்க்க வந்தவன்
வழி தவறி ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன்
சிறுவன் வாலிபன் முதியோன் என
ஒரு மன்னன் மூவராகி பக்கம் அமர்ந்து
ஏதோ கதைத்துக்கொண்டிருந்தனர்
‘நல்ல வேலையாக வந்துவிட்டீர்கள் ஒப்பனை இட்டு கொள்ளவும்’
உள் அழைத்தவள் தலைமுடி கலைந்திருந்தது கண்ணகி போல
நான் நடிகன் என அறிந்து
என்ன வேடம் எனத்தெரியாத பதற்றத்தோடு
ஒப்பனையிருக்கையில் அமர
“முதலில் முகம் அலம்பிவா“வெனச்சொன்னான் ஒருவன் ஏளனமாக
ஏனென்ற கேள்வியோடு நான் என் முகம் தீண்ட
விரல் நுனியில் பல வண்ணங்கள்
பழைய வேடத்தினுடையதென்ற அந்த ஒருவன் ஆண்டவனென அறிய முடியவில்லை எனக்கு!
அதிர்ந்து நின்ற எனை பார்த்து சப்தமிட்டது ஒரு கூட்டம்
ஒப்பனை அறைதான் மேடை என்று அப்பொழுதும் எனக்கு தெளிவாக தெரியவில்லை.
Posted by LakshmanaRaja at 11:47 PM 4 comments
Labels: கவிதை
Monday, November 26, 2007
இலக்கணத்தோடு பேசுகிறாய்
காத்திருப்பின் எல்லா
வலிகளையும் அர்த்தமற்று
செய்த ஓர் கட்டாயத்தின் வளைவில்
நீண்ட நாட்களுக்கு பிறகு
என் தனிமை உன்னோடு பயணிக்கிறது
தலைகுனிந்தபடி
விழி அவிழ்ந்த
அன்பின் வலிநிறம்பிய வார்த்தைகளை
ஓர் நோயின் அறிகுறியென விமர்சித்து ஒதுங்கி நின்று பின் சில உபாயங்கள் சொல்கிறாய்
பயனற்ற உன் மருந்துகளொடு வீடு திரும்புகையில் நோயாளியானேன் நான்
தன் பசிக்கு கேள்விக்குறிகளை தின்று
உடல் பெருத்த ஓர் முற்றுப்புள்ளியை மிக எளிதாக நீயிட
கேள்விகள் உருகுலைந்து வாக்கியங்கள் ஆனதும் இனி இதற்கெப்படி பதிலளிக்கவென இலக்கணம் பேசுகிறாய்
நீ எதுவும் பேசலாம்
பதிலளிக்க அன்பும் பதில்மறுக்க அறிவாளித்தனுமும் போதுமாயிற்றே
எல்லாம் செய்தும் உனை கருவாக்கி
சுமக்கிறது தாய்மையோடு என் கவிதை
உள்ளிருந்து உதைத்தளை பெருமிதத்தோடு
ஊருக்கு உரைத்தபடி.
Posted by LakshmanaRaja at 9:10 PM 3 comments
Labels: கவிதை
நிராகரிப்பின் நொடிகள்
மற்றுமொரு கவிதை எழுதும் அவசர பொழுதில்
கைதவறி தொலைந்தது அந்த கவிதை
அறை முழுதும் மேசையின் கீழ்
என் முகம் காட்டும் கண்ணாடி
எங்கு தேடியும் கிடைக்கவில்லை
இயலாமையின் விளிம்பில் மௌனமானா
வேளையில் திசையறியாத காதுகளில்
இரகசியமாய் வந்து ஊடுறுவியது ஒரு கண்ணீரின் சப்தம்!
அது ஒரு நிராகரிப்பின் வலி என்றென் அனுபவம் நினைவுகூர்ந்தது!
சப்தத்தைபற்றி எவ்வித அக்கறையற்று
என் அன்புடை நண்பர்களைப்போல வாழ்த்தெரியாது
நான் தரை சாய்கிறேன்!
Posted by LakshmanaRaja at 12:02 AM 0 comments
Labels: கவிதை
Sunday, November 25, 2007
பொம்மை
அவன் விளையாட
அவனே பொம்மை செய்துகொள்வான்
இந்த பொம்மையும் அந்த வகைதான்
செய்து முடித்து கண்கள் நுகர்கிறான்
அழகின் சில குறைகள் கண்டு உடைக்கிறான்!
மீண்டும் தொடங்குகிறது பொம்மை செய்தலெனும் வினை
இபோழுது மிக அழகாய் இருக்கிறது பொம்மை
எடுத்து ஆனந்தமாக விளையாடத்தொடங்கும் வேளையில்
பொம்மையின் கைகள் கண்கள் இதழ்களில் சில அசைவுகள் உணர்கிறான்
தவறு செய்து விட்டதாக பயம் கொண்டு அவசரமாக உடைக்கிறான்
மீண்டும் மண்ணாகிறது பொம்மை
தன் பிஞ்சு விரலால் மீண்டும்
பொம்மை செய்ய தொடங்கும் ஆண்டவன்
தெளிவாக இருக்கிறான்
அவன் செய்யும் பொம்மைகள்
அழகாக இருக்கவேண்டுமென்றும்
அதைவிட பொம்மையாகவும்!
Posted by LakshmanaRaja at 11:48 PM 0 comments
Labels: கவிதை
Sunday, November 18, 2007
நவீன ஓவியங்கள் பார்வைக்கு மட்டுமே
வீட்டை சுத்தம் செய்தபொழுது
ஒரு நவீன ஓவியம் கண்டெடுத்தேன்!
பல வண்ணங்களினாலானது!
சில வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாய்
சில மிக அழகாய்
சிலவைகள் தூசி படிந்து
ஒவ்வொறு வண்ணமும்
என்னை எனக்கு காட்டிக்கொண்டு கண்ணாடியைப்போல !
என் கண்கள் எல்லாவற்றையுமே நோக்குகிறது
ஒரு கடவுளை பார்ப்பது போல தன்னை மூடிக்கொண்டு!
அதை அந்த வண்ணங்கள் அறிந்திருக்கவில்லை!
ஓவியத்தின் இடையில் சில கோடுகளால்
பார்வை தடுமாறியது!
எல்லைகளைப்போல!பண்பாட்டைப் போல.
யாரோ எதற்கோ உருவாக்கியது அந்த கோடுகள்!
அந்த யாரோ நானகவும் இருக்கலாம்!
சில வண்ணங்கள் உடல் ஊடுருவும்
கத்தியைப்போல பிற வண்ணங்களுக்குள்
தம்மை நீட்டிக்கொள்கிறது எல்லைக்கோடுகள் கடந்தும்!
இப்படி சில வீடுகளும் சில ஓவியங்களும்
நானும் இருக்கும் ஒரு பாதையை
வழிச்சுமையாய் கொண்டு தொடர்கிறேன் வேறொருபாதையில்!
கைதவறி கீழ்வைத்துவிட
சுமந்து வந்த பாதை
ஒரு வேகத்தடையாய் சுருங்கி
வழிவிட மறுக்கிறது இப்பொழுது!
அறிவாளியாய்
வேகத்தை குறைத்து
தாண்டிச்செல்ல மனம் ஏனோ தான் மறுக்கிறது!
Posted by LakshmanaRaja at 11:34 AM 0 comments
Labels: கவிதை
கவனம் ஈர்த்தல்
பின்இருக்கையில் அமர்ந்திருந்தவன்
ஏதேதோ பாடல்களை வசனமாக பாடிக்கொண்டிந்தான்!
தமிழ் படித்ததாக அவ்வப்பொழுது சப்தமிட்டுக்கொண்டும்.சிரித்துக்கொண்டும்!
உடன் பயணித்தவர்கள்
அவன் பைத்தியம் என்று உணர்ந்திருக்கவேண்டும்.
அப்படித்தான் இருந்தது அவர்களின் பேச்சு அவனைப்பற்றி.
நான் எல்லொரையும் கவனித்துகொண்டிருந்தேன்.
நல்ல வேலை என்னை யாரும் கவனிக்கவில்லை.விமர்சிக்கவுமில்லை.
மௌனமாக இருப்பது ஒரு வகையில் நல்லதுதான்!
கவனிக்கப்படாமல் இருப்பதும்!
Posted by LakshmanaRaja at 10:26 AM 0 comments
Labels: கவிதை
கவிதை
எல்லாம் போல அதுவும்
அப்படியே இருக்கட்டும்...
இருக்கும் நிலையில்!
தவறோ சரியோ
நான் அதை தவறாக
நினைக்காதவரை!
உங்கள் நினைப்பை பற்றிய
என் நினைப்பும் அது போலவே..
Posted by LakshmanaRaja at 9:41 AM 0 comments
Labels: கவிதை
பிழைப்பு
உடைந்த முகம்
ஒன்று உடையாத கண்ணாடியில்!
ஒட்டி வைக்க முயற்சிக்கும்
விரல்களுக்கு தட்டு படாமல் விரிசல்கள்!
உணரவில்லை கண்கள்
இரத்தம் சிந்திய கைகளை!
மிச்சமாய் வலி மட்டும்
இதயத்தில்!!
எவனோ சொன்னான்
அது நானாம்!
என்ன முட்டாள்தனம்!
ஏகத்தாளமாய் சிரித்தேன்!
உடன் சிரித்தது
அந்த கண்ணாடி பிம்பம்!!
Posted by LakshmanaRaja at 7:18 AM 0 comments
Labels: கவிதை
Saturday, November 17, 2007
இரவு-நான்-பகல்
வன்மம் நிறைந்த
ஓர் மிருகத்தின் பதுங்கலென மெதுவாய்
என் இன்றைய பகலின்
உள் நுழைகிறது நேற்றைய இரவு!
தன் அசிங்கங்களை ஆடைக்குள் மறைத்து
அழகிய முகத்தோடு ஏக்கம் நிறம்ப
எனை பார்த்தது!
தன் நேரங்களை
நான் பகலுக்கு விற்றுவிட்டேனென்று
குற்றம் சாட்டுகிறது!
உண்மைதானென்று
உளம் சொல்ல விரல் நீட்டி
வாவென்றேன்!
எனக்கு பின்னிருந்த
பகல் உறுமியது இது
தன் குகை என்று!
இது இன்று மட்டுமல்ல்!
தினசரி வழக்கமாகிவிட்டது
இப்பொழுது!
இவை இரண்டுக்கும் இடையில்
எப்பொழுதும் நான்!
என் வாழ்கையை பலிபீடமாக்கி
அதன் முன் மண்டியிடுகிறேன்!
முதலில் வாளெடுத்து வெட்டுபவற்கு பீடம் பரிசு
என் உயிர் இலவச இணைப்பு!
வெட்டப்பட்ட என் உடலை
ஒட்டி வைத்து
உயிர் கொடுத்து மீண்டும்
தொடரலாம் இந்த விளையாட்டை
நாளையும் நேற்றை போல!
Posted by LakshmanaRaja at 8:58 AM 0 comments
Labels: கவிதை
Thursday, November 15, 2007
மதிப்பெண் பட்டியல்
<குறிப்பு: இந்த கவிதை 7 ஆண்டுகளுக்கு முன் கல்லூரி நாட்களில் (3ம் ஆண்டு) தேர்வு முடிவின் மதிப்பெண் பட்டியல் பார்த்து எழுதியது..உங்கள் ரசனைக்காக... நினைவில் இருந்ததை பதிவிட்டிருக்கிறேன். சில வடமொழிசொற்கள் அப்போதைய என் அடையாளம்.அதனால் மாற்றவில்லை..>
அறையும் அலைகளுக்காய்
காத்திருக்கும் மணல் நான்!
ஆறுமாதங்களுக்கு ஒரு முறை
நிச்சயிக்கப்படுகிறது என் நிகழ்காலம்
நிச்சயமற்றுபோகிறது என் எதிர் காலம்!
புரிந்து கற்றல்,தியானம்,தவம்
இன்னபிற முயற்சிகள்
எதுவும் தேடிப்பார்த்தும் காணவில்லை
அந்த அச்சிட்ட காகிதத்தில்..
எவனோ எழுதியதையெல்லாம்
புரிந்துகொண்டவன் நான்..
நான் எழுதியதை
புரிந்துகொள்ளத்தான் யாரும் இல்லை!
எழுத்து என் பெண்டாட்டி..
கண்டிப்பாக செத்திருக்கவேண்டும்
மதிப்பெண்ணிட்டவன் தூரிகைப்படடதும்!
வெறும் சவத்தின் மதிப்பு
73% !!
சரஸ்வதியை வேசியாக்க
என் மனம் இடம் கொடுக்கவில்லை!!
----------இலக்குவண்-------------------
http://www.onthewaytoreachme.blogspot.com/
Posted by LakshmanaRaja at 6:36 PM 0 comments
Labels: கவிதை
நம் அடையாளங்கள்
வாழ்க்கையின் சில கணங்களில் நாம் நம் அடையாளம் என சிலவற்றை நினைப்போம்.அதையே பின் ஒரு சூழலில் நாம் இல்லை என்று வாதாடுவோம்.காலம் 'நீ யார்' என்ற கேள்வியை எழுப்பிக்கொண்டே இருக்கும்.நாமும் அதனிடம் பதில் சொல்லிக்கொண்டே இருப்போம் மாற்றி மாற்றி முன்னுக்குப்பின் முரனாக. கடந்த காலத்து அடையாளங்கள் நிகழ் காலத்திற்கு பெரும்பாலும் பொறுந்துவதில்லை. எல்லாம் கடந்தும் அடி ஆழத்தில் நாம் நாமகவே இருப்பதான உணர்வும் நிலையாய் இருக்கும்.
"தவறு யாருடையது" என்ற என் கவிதையின் உள்ளர்த்தமும் அதுவே.
http://onthewaytoreachme.blogspot.com/2007/11/blog-post_14.html
Posted by LakshmanaRaja at 8:41 AM 0 comments
Labels: வாழ்வியல்
Wednesday, November 14, 2007
தவறு யாருடையது
இன்னது என் பெயர்
கோயிலில் சந்தித்தோம்
உயரம் அதிகம்
வெண்ணிற உடை
சிறிய கண்கள்
சென்னைத்தமிழ்
இன்னும் சில…
"ஓ!நீங்களா!நலம்தானே!!"
அலைபேசியின் மறுமுனையிலிருந்து
நீண்ட மௌனத்திற்கு பின்
வழிந்த புதிய அன்பில்
அசௌகரியமுணர்ந்தது என் சுயம்!!
அறிந்து பின் மறந்த நண்பனாய்
மெல்லிய புன்னகையுடன
கேள்வி எழுப்பும் காலத்திற்கு
உண்மையான
என் அடையாளங்கள் நன்றாக தெரியும்!
நான் தான் என்னை தவறாக
அறிமுகபடுத்திவிட்டேன் போலும்!
Posted by LakshmanaRaja at 7:29 PM 0 comments
Labels: கவிதை
Tuesday, November 13, 2007
புரிதலும் புரிதல் நிமித்தமும்
என் கவிதைகளை நான் அரங்கேற்றுவது குழுமங்களில் தான். எந்த குறை நிறை பற்றி விமர்சிப்பவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
கவிதையின் மிக முக்கியமான தேவையாகிய
எழுத்து பிழையற்று மிக சரியாக எழுத முத்தமிழ் மற்றும் பிரவாகம் எனக்கு மிகுந்த உதவி செய்துள்ளது,முக்கியமாக மஞ்சூர் அண்ணா..
ஆனால் பொருட்பிழை பற்றிய விமர்சனங்கள் தான் என்னை பாதிப்பது,,
என்ன கருத்துக்காக எழுதபட்டதோ அதுவே தவறாக உணரபடுவது போல் மிக மோசமாக நான் கவிதை எழுதவில்லை என்பது என் அளவில் உண்மை..
என் கவிதைகள் ரசிப்பு தன்மையை விட உணர்வு தன்மை அதிகம் உள்ளவை..(பெரும்பாலும் வலி மிகுந்தவை)
படித்த முதல் தடவை இரண்டொரு நொடிகளில் புரியும் அளவு எழுதுவது ஒரு வகை..
எங்களுடையது மற்றொருவகை. இவை அர்த்தம் புரியும் வரை கடினமாக இருக்கும்.புரிந்து கொண்டால் சொல்லப்படும் கருத்து ரசிக்கப்படுவதை விட அனைவராலும் உணரப்படும்.
இதற்கு 1. பொறுமை தேவை 2. அனுபவம் தேவை 2. இது போன்ற எழுத்துக்களை வாசித்தல்..தமிழ்நதி,தமிழச்சி,மானுஷ்யபுத்திரன்..(நம் குழுமத்தில் கென்)...இன்னும் பலர்...இவர்களோடு என்னை ஒப்பிடவில்லை.. அவர்களின் கவிதைகளை போன்றது தான் என்னுடையதும்,,
உயிர்மையில் வரும் கவிதைகள் படிப்பவர்களுக்கு என் கவிதைகள் மிக சாதாரனமாக புரியும்.
சிறு வயதிலிருந்து இன்று வரை ரசிப்பு தன்மை யிலிருந்து விலகி உணர்வு தன்மைக்கு வந்துவிட்டேன்...இது என்னை பொறுத்தவரை முன்னேற்றமே...
எல்லோருக்கும் புரியும் கவிதையை தான் எழுதவேண்டும் என்றால் என்னால் இயலாது..
கலைபடங்களும் வியபாரரீதியான படங்களும் வெவ்வேறு வகை.இரண்டும் தவறல்ல..ஆனால் இரண்டும் படங்கள் என்பதை ஏற்க வேண்டும்.
மேல் சொன்ன வார்தைகள் எதுவும் தவறென்று கருதினால் சொல்லலாம்..அனுபவமின்மையால் இப்படி புரியாமல் கவிதை எழுதுவதாகவும் சொல்லலாம். .ஆனால் நான் ஏற்றுக்கொள்வது நேற்றைய என் அனுபவங்களையும் நாளைய என் அனுபவங்களையும் பொறுத்ததே!
நன்றி
Posted by LakshmanaRaja at 7:11 PM 0 comments
Labels: சுய விளக்கம்
Sunday, November 11, 2007
என் உலகத்தின் நான்கு சுவர்கள்!
எவ்வகை இச்சையோடும் பொழுதைபோக்க
யாராக இருந்தாலும் இந்த
திரையரங்கிற்குள் நுழையத்தகுதியாய்
அன்பான சில வார்த்தைகள் போதுமாதலால்
நெரிசல் அதிகமிருக்கும்!கவனம் தேவை!!
நிலையாய் இருப்பது கடினமான
கழிப்பறையில் கழிவை நீக்கி
புத்துணர்வோடு வெளியேறும் பொழுது
விட்டுச்செல்வது அசிங்கமானாலும்
அவையும் ஒரு வகை அடையாளமே!
தேவையறிந்து இன்னபிற உருவமேற்கும்
இந்த நான்கு சுவருக்குள்
விருப்பம் நிறைவேறியதும்
சொல்லியும் சொல்லாமலும் பிரியலாம் நீங்கள்!
வழிதவறி வந்ததாகவும்
நேரமின்மையென்றும்
காரணங்கள் அதுவாகவே பதிவாகிவிடும்!
என் அறைதான் என்றாலும்
விட்டுச்சென்ற எச்சங்களினிடையே
நான் மட்டும் மிச்சமாய் இருப்பது
வலிமிகுந்த இரவுகளை தவறாமல்
தந்துச்செல்கிறது உங்கள் நினைவாய்!
தனித்தே இருந்தாலும்
கண்ணினுள்ளேயே
தங்குகிறது ஒரு நீர்த்துளி
வெளியேறுவது தவறென்றறிந்து!
வாயிலில் தொங்கும்
'நன்றி.மீண்டும் வருக'
அர்த்தத்தோடும் அர்த்தமற்றும்!
Posted by LakshmanaRaja at 5:26 AM 2 comments
Labels: கவிதை
Tuesday, October 30, 2007
என் கவிதைகள்
சற்று முன் பிறந்த
உலக வெளிச்ச சப்தமறியாத
சிறு குழந்தையின் அழுகுரல் கூறும்
உண்மையான அர்த்தத்தை
அன்புடை நண்பர்களும்
வழிபோக்கர்களும் புரிந்துகொள்வதேயில்லை!
தன்னை
உணர்வதற்கென்றே உயிர் வாழும்
அன்னை அருகிருக்கும் வரை
அது தன் அழுகையை தொடரலாம்
எவ்வித கவலையுமின்றி!
Posted by LakshmanaRaja at 9:13 AM 0 comments
Labels: கவிதை
Sunday, October 28, 2007
நான்!
சோற்றுப்பானையின் நிர்வாணம் மறைக்கும்
ஈரத்துணியின் தற்காலிக தீர்வாய்
மழை வந்து போகும்
வெயில் நிரம்பிய பாதையில்
கண்கள் பனிக்க
கூற்றெனும் ஆற்றோடு
கடலொன்று பயணிக்கிறது
யாரும் அறியாதவரை
அதுவும்
ஒரு ஓடம் தான்!
Posted by LakshmanaRaja at 6:50 AM 3 comments
Labels: கவிதை
Tuesday, October 16, 2007
:-)
பின் தொடரும்
குழந்தையாய் நான்!
என்னை
எப்பொழுதுமே
பொம்மையாக்கி
தொலைத்தழும்
மற்றுமொரு
குழந்தையாய் நீ!
Posted by LakshmanaRaja at 10:24 AM 3 comments
Labels: கவிதை
Saturday, October 13, 2007
என் செய்ய?!
குருதி படிந்த முட்தடங்களை
தெய்வீகம் உணர்ந்த நாட்களை
கனவென தகர்த்தெறியபட்ட
சில நினைவுகளை
உண்மையின் நிழலென
ஓர் சுயசரிதையை
கடிதத்தில் எதை எழுதுவது
தேவையற்றதாய் உணர்ந்தும் தொடர்கிறது
தற்கொலையின் முந்தைய இரவிலும்
தன்னை அடையாளப்படுத்தும்
அவன் முயற்சிகள்!
வெற்றுகாகிதத்தோடு நானும்
காத்திருக்கின்றேன் (தேவையற்றதெனினும்!)
என்னை மௌனித்திருக்கச் சொல்லிய
உன் வார்த்தைகளின் வலிகளை
கவிதையாக மொழிபெயற்க!
Posted by LakshmanaRaja at 10:16 AM 2 comments
Labels: கவிதை
Saturday, October 6, 2007
தொழில் தர்மங்கள்!!
குளிரூட்டப்பட்ட அறையின்
நான்கு சுவருக்குள்
பகுத்தறிவது கடினம்
காலை மாலை இரவுகளை!
உள்ளிருக்கும் எந்த பொழுதிலும்
செய்தலாகாது
பசி தூக்கம் பற்றிய
நினைத்தலெனும் தவறுகளை!
இகழ்ச்சியின் எல்லா சப்தங்களின்
இடையிலும் நழுவாது
இருக்கிறது உதட்டோரம்
ஒரு புன்னகை!
பொருட்படுத்த நேரமற்ற
உடலுறுப்புகளின்
வலி அனைத்தும்
ஒரு வகையில்
தொழில் இரகசியங்கள்!
மாறும் மருந்துகளிலும்
மருத்துவன் கையெழுத்து கிறுக்கல்களிலும்
அழிகிறது இளமையின் வண்ணம்!
மேல் சொன்ன அனைத்தையும்
பொருட்படுத்தாது
பல்லிளிக்கிறது மனம்
பணப்பை கனக்கையில்!
எந்த வகையில் நோக்கினாலும்
எனக்கும் வேசிக்கும்
பெரிய வித்தியாசம் இல்லை!
Posted by LakshmanaRaja at 10:57 AM 7 comments
Labels: கவிதை
நிலையானது வாழ்வு!!!..
Posted by LakshmanaRaja at 3:02 AM 0 comments
Labels: வாழ்வியல்
Tuesday, October 2, 2007
பானையின் ஒரு பருக்கை
இரவு நேர வீதியில்
காலைப்பொழுதின் இயலாமையை
துடைத்தெறிய விரைந்து
கடக்கும் மாநகர பேருந்தில்
இச்சையை கைபற்றும் வேகத்தோடு
உயிரை தவறவிட்டேறும்
நொடிபொழுதில்
கடவுளாகி மீண்டும்
அதுவானது ஓர் படிக்கம்பி!
வழித்தவற முற்பட்ட கணத்தில்
சற்றுமுன் உலகம் சமைத்த
யன்னலோர இருக்கை தேவையற்றுபோக
வெளியிறங்கிய எனை
பக்கம் அமர்ந்திருந்த
பாதசாரியாய்
திறக்கப்படாத கதவிற்குளிருப்பது
அறைமுழுதும் அதிரும்
நிரம்பி வழிகிறது
'அகர முதல எழுத்தெலாம்' !!!
Posted by LakshmanaRaja at 3:00 AM 2 comments
Labels: கவிதை
Sunday, September 30, 2007
நினைவின் அர்த்தங்கள்
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன்..என்னைப்போல் தான் (என்) வாழ்க்கையும்..:-)
Posted by LakshmanaRaja at 11:05 AM 2 comments
Labels: வாழ்வியல்
Thursday, September 27, 2007
கனவின் அர்த்தங்கள்..
"வயல் வெளியில் சிறு பறவை
விதைக்கிறதே பல கனவை!"
எழுதியவன் என்னை அறிந்திருந்தால் வார்த்தைகள் அர்த்தபடுத்த ஒருவன் இருப்பதை கண்டு வியந்திருப்பான். இது கர்வம் அல்ல. நான். அவ்வளவே. என் பார்வையின் எல்லா திசைகளிலும் கனவுகளை விதைத்துகொண்டே இருக்கிறேன். (ஒரு விதைப்பின் இடைவெளியில் கவனிக்கபடாமல் மற்றுமொரு விதையின் வாடுதல் நிகழ்ந்துவிடுவதை தடுக்க இயலவில்லை தான். :-(. இருந்தும் தொடர்கிறேன்). இதோ திங்கள் அன்று தமிழ் இலக்கியம் பயிலும் என் ஆசையை விதைத்திருக்கிறேன். பள்ளியில் படித்த காலத்திலே ஒரு காதலின் தேவையால் கவிதை எழுதுவதும் தமிழ் மீது அதிக ஈடுபாடும் ஏற்பட்டதை பற்றி நினைத்து பார்க்கிறேன். :-).
என் கவிதை மேல் எனக்கு ஒரு அதீத மரியாதை உண்டு. அதனாலேயே . என் கவிதை தோற்றால் என்னால் ஏற்க இயலாது.:-). ஒரு குடியரசு தின விழாவில் நடந்த கவிதை போட்டியில் தோற்று விட கூடாதென பெயர் அளிக்காதிருந்த என்னை, நண்பர்கள் கட்டாய படுத்தி மேடை ஏற்றினர். மாவட்ட அளவில் நடந்த அந்த போட்டியில் முதலாவதாக வந்ததும் என் இல்லத்தில் அதை சொல்ல யாரும் நம்ப மறுத்ததையும் என் வாழ்வின் மிகுந்த மகிழ்ச்சி நிரம்பிய தருணங்களாக உணர்கிறேன். அப்பொழுது கூட கிளிப்பிள்ளை போல் உன் ஆசை என்ன என்றால் 'பொறியாளர்' என்றே சொல்லிவந்தேன். பொறியியல் கல்லூரியில் சேர்ந்த முதல் நாள் பாட திட்டம் பார்த்து அதில் 'தமிழ்' ஏன் இல்லை என்று யாரிடம் கேட்க என்று தெரியாமல் விழித்தேன். என்னை போல் யாரும் விழித்திருக்கலாம். ஆனால் அடையாளம் தெரியவில்லை இன்று வரை. இருந்தும் அப்பொழுதும் காதல் கடிதம் எழுதவும் கவிதைகள் எழுதவும் எனக்கு தெரிந்த தமிழே போதுமானதாக இருந்தது.:-))). என் மீது தமிழுக்கும் தமிழ் மேல் எனக்கும் காதல் எனக்கே தெரியாமல் இருந்துவந்ததை நான் முழுமையாக அறிந்திருக்கவில்லை.. அந்த நாட்களில் தான் காதலுக்காக மட்டும் அபத்தமாய்(!) எழுதிக்கொண்டிருந்த என் விரல்கள் என் வலிகளுக்கும் கவிதை எழுத முயன்றது. தன்மானங்களை அழிக்கும் திறம் கொண்ட என் கண்ணீர் துளிகளால் கூட என் கவிதையின் வார்த்தைகளை அழிக்க முடிந்ததில்லை. தேர்வின் முடிவு தந்த வருத்தத்தை பதிவு செய்ய முயன்று சர்ச்சைக்கு உள்ளான ஒரு கவிதையும் உண்டு.(தேடிகொண்டிருக்கிறேன்.கிடைத்ததும் இங்கு பதிவிடுகிறேன்). கல்லூரி முடிந்து வேலையற்ற நாட்களிலும் விரிவுரையாளராக பணியாற்றிய நாட்களிலும் கவிதையும் தமிழும் சற்றே ஒதுங்கி நின்றது.இதோ இப்பொழுது இந்த அலுவலக வாழ்க்கையில் கவிதைக்கென்று இடம் அதிகம் ஒதுக்கவில்லை என்றாலும் எனக்கும் என் தேவதைக்குமான
என எண்ணிக்கையில் மிக சிறிய ஆனாலும் அர்த்தம் மிகுந்த என் வலையுளக நண்பர்களிடம் இந்த பதிவின் மூலம் வாழ்த்துதல் பெற விழைகிறேன்.
பி.கு :
நான் இன்று தமிழை என் உணர்வு சார்ந்த ஓர் உயிராக பார்க்கிறேன். என்னை உலகில் மதிக்கும் மற்றுமோரு ஆன்மாவாகவும்.மேலும் கல்வி மனிதனை உருவாக்கும் என்பதை நான் ஏற்பதில்லை.வாழ்வியலில் நம் தேவைகளுக்கு அதுவும் ஒரு கருவி / ஒரு வழி அவ்வளவே. இலக்கியம் பயில்வதன் மூலம் என் எண்ணங்களை ,உணர்வுகளை மேலும் தெளிவாக பதிவு செய்ய முடியும் என்ற நம்பிக்கையும் சங்க இலக்கியங்களுக்குறிய அழகின் இரகசியம் அறியும் முயற்சியுமே இது,...
Posted by LakshmanaRaja at 10:29 AM 2 comments
Labels: வாழ்வியல்
Tuesday, September 25, 2007
நட்பின் அடையாளங்கள்!
வைத்து வெளிச்சத்தை
வெளியே தேடச்சொல்லும்
வாழ்வியலின்
முட்டள்தனத்தில்
பார்வையை இழக்கும்
அபாயம் நிறைந்தவை
முகமூடிகள் அணிய
மறுக்கும் என் போன்ற
அறிவாளிகளுக்கு
பொது இடங்களில்
நிர்வாணம் தடை செய்யப்பட்டுள்ள
இந்த சமூகத்தில்
மிச்சமிருப்பவை
ஆற்றாமையும்
சில ஆறுதலும்
கேவலமான புன்சிரிப்பும்!
பாதுகாப்பற்ற உண்மை பொய்தேடி
ஒளிவதையொத்து நிகழ்கிறது
சுயத்தை இழந்தேனும்
உன்னை சேரும்
என் பயணங்கள்!
பயமுறுத்தும் பார்வையோடு தனிமை!
குறைந்தபட்ச மனிதத்தன்மை
கூட இல்லாமல் நடந்துகொள்ளும்
என் ஆருயிர் நண்பனுக்கு
எப்படி புரியவைப்பேன்
இன்றும்கூட பார்த்தவுடன்
யாரோவென முகம்
திருப்பிகொள்ள இயலாத
என் இருப்பை!
Posted by LakshmanaRaja at 8:38 PM 3 comments
Labels: கவிதை
Saturday, September 22, 2007
நானும் அவனும்
அவனை!
வல்லினம் கூட மெல்லினமாக தன்னை
உணரும் அவன் வார்த்தைகளில்!
தன் வீட்டிலும் -
நன்பர்கள் வீட்டிலும்
அவன் தான் நல்லப்பிள்ளை.
எப்பொழுதும் மழையீரம்
நிரம்பிய அவன் முகத்தில்
முகமூடிகள் பிரித்தறிவது கடினம்!
நிரம்பிய அனுபவசாலி!
சில நொடிகளில்
மகிழச்செய்பவன்!
பிறர் சுயம் மதிப்பதை
தன் சுயம் என வாழ்பவன்
அவனுக்கு கவிதை எழுத
தெரியாதென என்னை கர்வம் கொள்ள
செய்பவன்!
ஓர் உடலில்
இருதுருவங்களென நாம்
வாழ்கிறோம் என்று நான் கூறுகையில்
மிக அழகாக புன்னகைப்பவன்!
ஓர் சுயத்தின்
நிரூபித்தலுக்கு இலக்காகி
சற்றுமுன் கொலையின்
குரூரத்தோடு முகம் அறைந்து
வீழ்ந்த உணர்வுகள் நிரம்பிய
என் கவிதைகளில்
வழியும் குருதியின் வாசத்தால்
வெறிகொண்ட வன்மதோடு
எழுத முனைந்த என் துவ்வலை
தடுத்தாண்டு
காற்றுக்கசையும் புல்வெளியின்
மகத்துவத்தை பற்றி கவிதை எழுத அழைக்கின்றான்..
தன்னை மதிப்பவரை
மதிக்க வேண்டும் என்று
ஓர் விண்ணப்பத்தை
வைத்து செல்கிறது
காலம்!
இலக்குமண ராசா
Posted by LakshmanaRaja at 11:24 PM 5 comments
Labels: கவிதை
Friday, September 21, 2007
இனியேனும் நிறுத்துகின்றேன் உனக்கென கவிதை எழுதுவதையாவது!
தெரியாது!
மீண்டும் மீண்டும்
வலிகள் உணர்த்துகின்றன
உன் மீதான
என் அன்பின் ஆழத்தை!
நீ விட்டு சென்ற
முட்களை நினைவுச்சின்னமென
சேகரிக்கின்றேன்
கவனிக்கப்படாமல்
என்னை போல் வீழ்கிறது
விரல் நுனி ரத்தம்
அதே பாதையில்......
உன் கவிதைக்கு
மற்றுமொரு
'அசைச்சொல்'லென
அர்த்தமற்று
தொக்கிநிற்க மறுக்கிறது
என் சுயம்...
கண்ணீரோடும் சப்தத்தோடும்
காலத்தின்(காலமின்மையின்!) கைகளில்
இழுத்து செல்லப்படும்
ஓர் குழந்தையின்
கைவிரல் நீட்டிய
எதிர் திசையில்
சிரிக்கிறது
அழகான பொம்மை ஒன்று
அமைதியாய்..
Posted by LakshmanaRaja at 11:46 AM 0 comments
Labels: கவிதை
Thursday, September 13, 2007
மௌனம் சார்ந்த நிலங்களில்
வர மறுக்கின்றன்
உன் மௌனத்தோடு
வைத்திழந்த
என் வார்த்தைகள்
ஒரு தோல்வியின் தாளாமையோடு
அன்றைய மழையை
உன் வரவை
இன்றைய வெயிலை
நிரப்பிபோகிறது காலம்
ஒரு பாதசுவடுக்குள்!
அந்த சுவடின் ஓரத்தில்
நிலையாய்
நிற்கும் ஒரு பார்வையில்
கொடிய வெயில் ஒன்று
மழையாய் உருகும்
அபத்தம் நிகழ்கிறது!
முகம் மூடி சுயம்
மறைக்கும் உன் விரல்களினூடே
வழியும் கண்ணீர் துளிகளை
கவிதை என அடிக்கோடிடும்
உன் முயற்சிகளில்
சிறு சாட்டைக்கு பயந்து
கோயில் வாசல் யானையொத்து
தன் சுயம் மறந்து
எல்லைக்குள்
நிற்கிறது
மொனமாய் ஓர் அன்பு..
அன்பை எதிர் நோக்கும்
கேள்விகளுக்கு
தேர்வின் அக்கறையோடு நீ
தரும் வெறுமை நிரம்பிய பதில்கள்
எனக்குள் நினைவுபடுத்துகிறது
சில கவிதைகளையும்
இயலாமைகளையும்...
இதை கவிதையென்றும்
நான் கவிஞன் என்றும் நீ
கூறி செல்லலாம்..
காலம் எதைதான்
நிகழ்த்தவில்லை..
Posted by LakshmanaRaja at 8:08 PM 2 comments
Labels: கவிதை
Sunday, September 2, 2007
நட்பு
அக்கறையோடு பராமறிக்க
அசௌகரியத்தின் பொழுது வெட்டிவிட
மிக எளியதாகவே இருக்கின்றது
என் விரல்களில்
சில நகங்கள்!
வெட்டும் எந்த பொழுதிலும்
நினைவில் நிற்பதில்லை
நானும் ஒரு நகமென
வெட்டப்பட்ட பொழுதில்
உணர்ந்த வலிகள் எதுவும்!
Posted by LakshmanaRaja at 11:56 PM 7 comments
Labels: கவிதை
இன்று இரவு துயர்மிகு கவிதை ஒன்றை நான் எழுதலாம்
பயத்தோடு காத்திருகின்றன நாம்
பகிர்ந்து கொண்ட வார்த்தைகள்!
முறைத்து கொண்டிருகிறது அன்று
நீ இருந்த அதே இருக்கையிலிருந்து
ஒரு முற்றுப்புள்ளி
இரக்கமற்று!
உன் பதில்களற்ற என் மடல்களில்
காத்திருக்கிறது
காதல் காமம் நட்பு இரத்த அடையாளங்கள்
ஏதுமற்ற 'யாரோ' வின் அன்பு
கவனிப்பாரற்று!
இரவின் இரகசியங்களை
தன்னுட்படுத்தி
சிறு அலைகளினூடே நிலையாய்
நகரும் ஆற்றின் மௌனத்தோடு
கடந்து செல்கிறாய்
உன் திசை நோக்கிய பாதையின்
நீளத்தோடு என் நிழல் பரப்பி
காத்திருக்கிறேன்!
பாம்பை கண்ணுற்ற
அனிலின் சப்தமென
தொடர்கிறது
'இறுக சாத்தப்பட்ட கதவொன்று'
Posted by LakshmanaRaja at 8:47 PM 4 comments
Thursday, August 23, 2007
(மின்)அஞ்சல் பெட்டி
கிழிந்து
பயன்பாடற்று
தெருவோர குப்பையில் வீழ்ந்த
அந்த கைப்பைய்யில்
பணம் தேடும் ஒரு பிச்சையின்
விரல்கள் எப்பொழுதும்
மறப்பதில்லை
முன் ஒரு நாளில்
கிடைத்த ஒற்றை ரூபாயையும்
அது தந்த மகிழ்சியையும்!
Posted by LakshmanaRaja at 7:51 AM 2 comments
Labels: கவிதை
Tuesday, August 21, 2007
உறக்கம் தொலைத்தல்
Posted by LakshmanaRaja at 8:05 PM 1 comments
Labels: கவிதை
Sunday, August 19, 2007
தன்னிலை விளக்கம்
அறிமுகம் ஏதுமில்லை
இருப்பினும் உனக்காய்
ஒரு பதிவு
அழகான அனுபவமாய்
உருமாறும்
நேற்றைய கண்ணீராய்
தினசரி பதிவு செய்கிறாய்
என் தனிமையை
தனித்துவத்தை வலிகளை
உன் கவிதைகளாகவும்
சில கதைகளாகவும்!
என் நாட்குறிப்பை
நானே விமர்சிக்கும்
உணர்வோடு பதிவு செய்கிறேன்
என் பின்னூட்டங்களை
உன் பதிவுகளில்!
அனைத்தும் கற்பனை
என்று நீ கூறினால்
அதன் உண்மை என் வாழ்வு!
ஆயிரம் வேறுபாடுகள்
இருந்தாலும் நாம்
இருவரும் யன்னலின்
கம்பியை பிடித்திருகிறோம்
ஒரே வானத்தை பார்த்தபடி!
வாழ்கை மிக
சுவாரசியமானது
என்றே தோன்றுகிறது!
நீயும் இதை
வழிமொழிவாய் என்றே
உணர்கிறேன்!
Posted by LakshmanaRaja at 5:56 AM 5 comments
Labels: கவிதை
Friday, August 17, 2007
சுயம்
யாவரும் பார்க்க
நிகழும் வல்லுறவின்
வலியோடு
தன் சுயம்
இருப்பு அடையாளங்கள்
எல்லாம் இழந்து
சிலையாகி இறந்தது
நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த தடையும் இல்லை!
Posted by LakshmanaRaja at 10:29 PM 5 comments
Labels: கவிதை
Monday, August 13, 2007
யாரோ
நொடி பொழுதில்
என் அறைக்கதவு
Posted by LakshmanaRaja at 7:30 AM 2 comments
Labels: கவிதை
Saturday, August 11, 2007
ஓய்வு நேரங்களில்..
விக்கித்தவித்த அன்றைய பொழுதில்
உணர்வுகள் முழுதும் உன் பெயர்!
தண்ணீர் குவளையோடு
அவசரமாக வந்தாய்
உன் ஒய்வு நேரத்தில்.
எல்லாம் முடிந்தும்
மீண்டும் விக்கினேன்
உன் அன்பிற்காக!
மன்றாடினேன் ஆண்டவனிடம்
இனியேனும்
உன் ஓய்வு நேரத்தில்
வரவேண்டும் என்று.
தன் இருப்பை உணர்த்தியபடி
உள் நகர்ந்தது
முள் ஒத்த ஓர் உருவம்!
கண்டிப்பாக தெரியும்
இந்த வரி(லி)களை
நீ படிப்பாய் என்று
கண்கள் பனித்தபடி
உன் மற்றுமொறு
ஓய்வு நேரத்தில்!
Posted by LakshmanaRaja at 8:28 PM 2 comments
Labels: கவிதை
Tuesday, July 10, 2007
Friday, June 15, 2007
Sunday, June 3, 2007
காத்திருப்பு
பயத்தோடு இனியும்
மறுப்பதற்கில்லை
உனக்கான சுதந்திரத்தை!
இனிவரும் நாட்களில்
அந்த அகதியின் கூட்டுக்குள்
பறவையாக மாறாலாம்
நான்! நம் உறவின் மகிமை
பற்றி அன்று
பேசலாம்
கிளைகளில் அமர்ந்தபடி!
என் சிறகுகள்
திருடபட்டவை அல்ல!
கைதவறி என்னிடம் சேர்ந்ததும் அல்ல!
வரமாக வந்தவை என்று நான் சொன்னாலும்
உன்னை தேவதை ஆக்கியது நான் அல்ல!
நம் காத்திருப்பின் பகிர்தலில்
தன் இருப்பை உணர்த்த
ஓடி களைத்து தலை சுற்றி விழுந்து
உடைந்த உன் கைகடிகாரத்தின் முட்களை
கவனிக்க அங்கு யாரும் இல்லை!
நமக்கும் அக்கறையில்லை!
உடைந்த சப்தம் மட்டும் பரிதாபமாய்!
நம் உறவை அளவெடுக்க
தேடப்படும் அளவுகோல்
தொலைந்தே ஒழியட்டும் என்று
சாபத்தை வரமாக பெற்ற
நம் பிரிவின் தவத்தை வியந்து நன்றி தெரிவிப்போம்
அன்று!
Posted by LakshmanaRaja at 10:46 AM 5 comments
Labels: கவிதை
Thursday, May 31, 2007
என் வழியில்
எதை நினைக்க?எதை மறக்க?
எதில் தெளிய? எதில் ஒளிய?
கேள்விகள் படிக்கும் முன்னே
வெற்றியோ தோல்வியோ
வெளிவருகின்றன தேர்வின் முடிவுகள்!
உண்மையாக சொல்கிறேன்
தேர்வை நான் எழுதவில்லை !
யாரோ உடைக்கிறார்கள்
நான் உடைகிறேன்! சிதறிய
என் துண்டுகளால் என்னை காயப்படுத்தும் பொழுது
யார் மேல் கோபம் கொள்ள?
எச்சரிக்கை தேவை!
எப்படியோ கல்லான என்னை
பெண்ணாக்க காத்திருக்கலாம்
சில பாதங்கள்!!
கதவாக ஆசை பட்டு
வாசலுக்கு வந்ததை
மறப்பது கடினம்!
நடக்க வேண்டியவையின்
இடையில் எப்படி வந்தன
நடக்க கூடாதவைகள்?
பகுத்தறியும் அளவிற்கு
ஆண்டவனுக்கு அனுபவம்
இல்லையோ?
காலப் பாதையில்
என் அடையாளங்களை
சேகரிக்கும் ஒவ்வொரு நொடியுலும்
உடை மாற்றுகிறது மனது!
எப்படி அறிய போகிறேனோ
தெரியவில்லை
நாளை நான் என்னை!
வார்த்தையின் பள்ளத்தில்
அர்த்த கடல் விழுந்து
வீணாகிறது.
மிச்சமாய் நிற்பவை
வார்த்தைக்கான அர்த்தங்கள்!
எங்கே தேடுவேன்
அர்த்தங்களுக்கான வார்த்தைகளை?
வாழக்கை படிகளில்
சறுக்கி விழுந்தாலும் ஒரு படி
மேலே தான் விழுவோம்
விழுதலில் தவறில்லை!
உடலோடு இல்லாதவனாய்
உயிரோடு இல்லாதவனாய்
ஊர் சொல்லலாம்.
எப்படி நான் சொல்வது
என்னை?
எதுவும் சொல்வதற்குள்
காகிதம்,துவ்வல்,
வார்தைகளின் வழியாக
தீர்ந்து விடுகிறேன்
நான்!
Posted by LakshmanaRaja at 1:36 AM 3 comments
Labels: கவிதை
Sunday, May 6, 2007
Monday, April 9, 2007
வாழ்க்கை
பாதை தேடிய
என் பயணத்தில்
ஒரு முறை கூட கவணித்ததில்லை
என் பாதங்கள்
உருவாக்கிய பாதையையும்
அதில் வந்து போன
ஒரு சிலரையும்!!
Posted by LakshmanaRaja at 3:18 AM 1 comments
Labels: கவிதை