//குறிப்பு: என் தேவதையின் உணர்வை மொழிபெயர்த்திருக்கிறேன்//
பனிமூட
உயிர் உறையும்
நாட்களில் சவமாகி
அசைவற்ற மரமாகிறேன்!
பனி நீக்கி
உயிர் காத்திடும் காற்று
என் இலை உதிர்த்து
தன் வழிநோக்கி பயனிக்க
இனி ஒட்டயியலாது
என் வசந்தத்தின் சாட்சிகள்
விழிநீரில் மிதக்கிறது
உயிர்பெற்ற எனை பார்த்து
இருத்தலின்
கேள்விகள் எழுப்பியடி!
இலைஉதிர்ந்த
கனுக்கலின் வலியுணர்ந்த
சிறு பனிமேடுகளால்
யாரோ மருந்திட
காயங்கள் அழகாக
அழகானது மரம்
தன் கதிரின் வெம்மை தாளாது பனிவிலக
அந்த சூரியன் எதிர் பட்டவர்களிடம் வருத்தம் பகிர்ந்து
மேற்கு நோக்கி பயனிக்கிறது
தான் மரத்தின் அழகை ரசிக்கவே விரும்பியதாக!
இயல்புகளுக்கும் இயற்கைக்கும்
உள்ள தூரத்தில்
வாழ்கிறேன்
நான்
சில நேரங்களில் சூரியனாகவும்
ல நேரங்களில் சூரியனோடும்!
இறந்தகாலத்தின் வசந்தம்
நிகழ்காலத்தின் பனியும்
எதிர் காலத்திலும் உண்டென
அறிந்த மரத்திற்கு
தெரியும்
‘எல்லாம் கடந்து போகும்’ என்பது!
Tuesday, December 18, 2007
பனி மூடிய பாதையில் உறைகிறேன் நானும் ஒரு மரமாய்!
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
\தன் கதிரின் வெம்மை தாளாது பனிவிலக
அந்த சூரியன் எதிர் பட்டவர்களிடம் வருத்தம் பகிர்ந்து
மேற்கு நோக்கி பயனிக்கிறது
தான் மரத்தின் அழகை ரசிக்கவே விரும்பியதாக!\\
வாவ் ! வாவ்.......சான்ஸே இல்ல, அட்டகாசமான வரிகள், மிக மிக ரசித்தேன் இவ்வரிகளை.
[சூரியன் வருத்தம் தெரிவிப்பது போன்று கற்பனை செய்து பார்க்கும் போது ஒரு புன்னகை பூக்கிறது!]
ரசிகாவிற்கு : மிக நன்றி
\\
தன் கதிரின் வெம்மை தாளாது பனிவிலக
அந்த சூரியன் எதிர் பட்டவர்களிடம் வருத்தம் பகிர்ந்து
மேற்கு நோக்கி பயனிக்கிறது
தான் மரத்தின் அழகை ரசிக்கவே விரும்பியதாக!
\\
மிகச்சிறந்த கற்பனை!!
பாராட்டும் தகுதி எனக்கு இருப்பதாய் தெரியவில்லை....
இரசிக்கிறேன்
Post a Comment