Monday, December 3, 2007

நானும் அந்த மேடையில்!


நாடகம் பார்க்க வந்தவன்
வழி தவறி ஒப்பனை அறைக்குள் நுழைந்தேன்
சிறுவன் வாலிபன் முதியோன் என
ஒரு மன்னன் மூவராகி பக்கம் அமர்ந்து
ஏதோ கதைத்துக்கொண்டிருந்தனர்
‘நல்ல வேலையாக வந்துவிட்டீர்கள் ஒப்பனை இட்டு கொள்ளவும்’
உள் அழைத்தவள் தலைமுடி கலைந்திருந்தது கண்ணகி போல
நான் நடிகன் என அறிந்து
என்ன வேடம் எனத்தெரியாத பதற்றத்தோடு
ஒப்பனையிருக்கையில் அமர
“முதலில் முகம் அலம்பிவா“வெனச்சொன்னான் ஒருவன் ஏளனமாக
ஏனென்ற கேள்வியோடு நான் என் முகம் தீண்ட
விரல் நுனியில் பல வண்ணங்கள்
பழைய வேடத்தினுடையதென்ற அந்த ஒருவன் ஆண்டவனென அறிய முடியவில்லை எனக்கு!
அதிர்ந்து நின்ற எனை பார்த்து சப்தமிட்டது ஒரு கூட்டம்
ஒப்பனை அறைதான் மேடை என்று அப்பொழுதும் எனக்கு தெளிவாக தெரியவில்லை.

4 comments:

காஞ்சனை said...

வாழ்வின் நித‌ர்ச‌ன‌ம் சொன்ன‌ வ‌ரிக‌ள். க‌விதைக்குப் பொருத்த‌மாய் ப‌ட‌மும். அருமை.

- சகாரா.

Rasiga said...

\\ஒப்பனை அறைதான் மேடை என்று அப்பொழுதும் எனக்கு தெளிவாக தெரியவில்லை.\\

அபாரமான கற்பனை.

LakshmanaRaja said...

அன்பு தங்கையே அகமகிழ்ந்தேன்

ரசிகா : மிக நன்றி.

Dreamzz said...

/அதிர்ந்து நின்ற எனை பார்த்து சப்தமிட்டது ஒரு கூட்டம்
ஒப்பனை அறைதான் மேடை என்று அப்பொழுதும் எனக்கு தெளிவாக தெரியவில்லை.//
superu!