Monday, December 10, 2007

தனிமையின் தழல்


எரியும் சிதை ஒன்று
உடல் இறுகி எழ
அடித்து அடக்க தடியுடன் பக்கம் நிற்கிறான் ஒருவன்

தீமூட்டிய கரங்களும்
உடனிருந்து வழிகாட்டிய கூட்டமும்
கலைய தொடங்கியது

அவன் உயிரோடிருப்பதாக
நான் மட்டும் உரத்த குரலோடு
உண்மையை எழுப்புகிறேன்

இறந்தவன் பேசுவதான பயத்தோடு
கவனித்தும் திரும்ப மறுத்து
சலனமற்று வந்த வழி தொடரும் கூட்டத்தில்
தன் அடையாளம் மறைக்கும்
முயற்சியில் வளைகள் அவிழ்ந்து கீழ்விழ
நடையிடுகின்றது எரிமூட்டிய கரங்கள் !

தடியை உயர்த்தி காத்திருப்பவனுக்கு
பயம் ஏதுமில்லை என்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை.

4 comments:

யாத்ரீகன் said...

லட்சுமன் ....

ரொம்ப நாள் கழித்து ஆதியின் மின்னஞ்சல் எழுத்துக்களை சிதைக்காமல் வந்தது.. அதே நேரம் இந்த கவிதையும் மிகவும் இரசிக்க முடிந்தது...

முக்கியமாய் இதை..

>>> தன் அடையாளம் மறைக்கும்
முயற்சியில் வளைகள் அவிழ்ந்து கீழ்விழ<<<<

>>>> பயம் ஏதுமில்லை என்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை<<<<<

LakshmanaRaja said...

மிக நன்றி நண்பா.

Rasiga said...

இந்த சூழலை அடிப்படியாக வைத்தும் கவி எழுத முடியுமா என வியந்தேன்,

\\தடியை உயர்த்தி காத்திருப்பவனுக்கு
பயம் ஏதுமில்லை என்பதில் எந்த
ஆச்சரியமும் இல்லை.\\

நிதர்சனம்!

LakshmanaRaja said...

ரசிகாவிற்கு : மிக நன்றி தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும்