Saturday, October 13, 2007

என் செய்ய?!








மகிழ்ந்துயிர்த்த இறந்த காலங்களை
குருதி படிந்த முட்தடங்களை
தெய்வீகம் உணர்ந்த நாட்களை
கனவென தகர்த்தெறியபட்ட
சில நினைவுகளை
உண்மையின் நிழலென
ஓர் சுயசரிதையை
கடிதத்தில் எதை எழுதுவது
தேவையற்றதாய் உணர்ந்தும் தொடர்கிறது
தற்கொலையின் முந்தைய இரவிலும்
தன்னை அடையாளப்படுத்தும்
அவன் முயற்சிகள்!

வெற்றுகாகிதத்தோடு நானும்
காத்திருக்கின்றேன் (தேவையற்றதெனினும்!)
என்னை மௌனித்திருக்கச் சொல்லிய
உன் வார்த்தைகளின் வலிகளை
கவிதையாக மொழிபெயற்க!

2 comments:

தமிழ்நதி said...

"குருதி படிந்த முட்தடங்களை..."

கவிதை முன்னரிலும் வேறொரு தளத்திற்கு நகர்த்தப்பட்டுக்கொண்டிருப்பதை மேற்கண்ட வரிகள் உணர்த்துகின்றன. கற்கக் கற்க கண்டடையும் இலக்கு தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும் என்பதை வாசிப்பின் வழி உணர்ந்திருக்கிறேன். நீங்களும் அவ்விதம் நிறைய வாசிக்கவும் எழுதவும் வாழ்த்துக்கள்.

LakshmanaRaja said...

மிக நன்றி தமிழ்நதி அவர்களே..
ஆம்..நிறைய வாசிக்கவேண்டும்.