Tuesday, September 25, 2007

நட்பின் அடையாளங்கள்!


பார்வையை கண்ணில்
வைத்து வெளிச்சத்தை
வெளியே தேடச்சொல்லும்
வாழ்வியலின்
முட்டள்தனத்தில்
பார்வையை இழக்கும்
அபாயம் நிறைந்தவை
வெளிச்சம் தேடும் முயற்சிகள் !

முகமூடிகள் அணிய
மறுக்கும் என் போன்ற
அறிவாளிகளுக்கு
பொது இடங்களில்
நிர்வாணம் தடை செய்யப்பட்டுள்ள
இந்த சமூகத்தில்
மிச்சமிருப்பவை
ஆற்றாமையும்
சில ஆறுதலும்
கேவலமான புன்சிரிப்பும்!

பாதுகாப்பற்ற உண்மை பொய்தேடி
ஒளிவதையொத்து நிகழ்கிறது
சுயத்தை இழந்தேனும்
உன்னை சேரும்
என் பயணங்கள்!
பயமுறுத்தும் பார்வையோடு தனிமை!

குறைந்தபட்ச மனிதத்தன்மை
கூட இல்லாமல் நடந்துகொள்ளும்
என் ஆருயிர் நண்பனுக்கு
எப்படி புரியவைப்பேன்
இன்றும்கூட பார்த்தவுடன்
யாரோவென முகம்
திருப்பிகொள்ள இயலாத
என் இருப்பை!

3 comments:

pRaBhU said...

1st para communism
2nd science
3rd mythology
4th fact

Kind of evolution a man's ideas undergo in his lifetime..
These things happen for very stupid and unknown reasons.
It is just being stupid. In the recent past I've learned that socializing is the best way forward.
தனிமை isnt! it is just pretending non-existence.

not just a view/comment, a confession...

LakshmanaRaja said...

:-)))

மஞ்சூர் ராசா said...

ஏன் பலர் தன்னிரக்கம் கொள்கிறார்கள்.

தன்னிரக்கம் என்னை கொன்றுவிடுமோ என்று பயப்படுகிறேன் என சொல்கையிலேயே அந்த தன்னிரக்கம் எந்த அளவு தன்னை பாதிக்கிறது என்பது தெரிகிறது.

அதை தாண்டி வந்தால் நிச்சயம் வெற்றிதான்.