Sunday, September 2, 2007

நட்பு


அழகு படுத்த
அக்கறையோடு பராமறிக்க
அசௌகரியத்தின் பொழுது வெட்டிவிட
மிக எளியதாகவே இருக்கின்றது
என் விரல்களில்
சில நகங்கள்!


வெட்டும் எந்த பொழுதிலும்
நினைவில் நிற்பதில்லை
நானும் ஒரு நகமென
வெட்டப்பட்ட பொழுதில்
உணர்ந்த வலிகள் எதுவும்!

7 comments:

காயத்ரி சித்தார்த் said...

//வெட்டும் எந்த பொழுதிலும்
நினைவில் நிற்பதில்லை
நானும் ஒரு நகமென
வெட்டப்பட்ட பொழுதில்
உணர்ந்த வலிகள் எதுவும்!
//

அச்சோ! என்ன சொல்ல? அப்பட்டமான உண்மைதான் லட்சுமண். என்னவோ ஒரு குற்ற உணர்வு தருகிறது உங்கள் கவிதை. :(

LakshmanaRaja said...

என் செய்ய! என் குற்றவுணர்வை தான் நானும் பதிவு செய்துள்ளேன்.

pRaBhU said...

Hope this doesn't have any inner meanings. In that sense, yes, as ur friend has mentioned it reflects the guilty feeling spontaneously.

Note: Machi, how about developing a spell check in tamil, for ill literates like me to improve on?!

LakshmanaRaja said...

ss. jus friendship i meant.
machi there is no such tool as of my knowledge.i can understand ur feel. u jus try to practise.

தமிழ் said...

/வெட்டும் எந்த பொழுதிலும்
நினைவில் நிற்பதில்லை
நானும் ஒரு நகமென
வெட்டப்பட்ட பொழுதில்
உணர்ந்த வலிகள் எதுவும்!/

நினைவில் நிற்கும் வரிகள்

LakshmanaRaja said...

நன்றி திகழ்மிளிர்.

M.Rishan Shareef said...

மிக அருமையான கவிதை...!