Friday, August 17, 2007

சுயம்



யாவரும் பார்க்க‌
நிகழும் வல்லுறவின்
வலியோடு
தன் சுயம்
இருப்பு அடையாள‌ங்க‌ள்
எல்லாம் இழந்து
சிலையாகி இறந்தது
ஒரு கல்!

நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த‌ த‌டையும் இல்லை!

5 comments:

மஞ்சூர் ராசா said...

சிலையாகி உயிர்ப்பெற்றது என நேர்மறையாகவும் சிந்திக்கலாமே நண்பரே...

LakshmanaRaja said...

கல்லாக பிறந்த என்னை கல்லாகவே வாழவிடுங்களேன் என்ற ஏக்கம் தான் நண்பரே!

இந்த கவிதை என் வாழ்வியலின் நிலை உணர்த்தளாகவே பதிவு செய்தேன்!

சுயம் அற்று வாழ்தல் எதற்கு?

இராம்/Raam said...

நல்லாயிருக்கு......

LakshmanaRaja said...

மிகவும் நன்றி நண்பரே..

தமிழ்நதி said...

"யாவரும் பார்க்க‌
நிகழும் வல்லுறவின்
வலியோடு..."

நல்ல - கொடுமையான உவமை. சுயம் அழிந்து வாழ்தலே நமக்கெல்லாம் என்றிருக்கையில் கல்லை என்ன சொல்ல...? வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள்.