முகம் பார்ததில்லை
அறிமுகம் ஏதுமில்லை
இருப்பினும் உனக்காய்
ஒரு பதிவு
அழகான அனுபவமாய்
உருமாறும்
நேற்றைய கண்ணீராய்
தினசரி பதிவு செய்கிறாய்
என் தனிமையை
தனித்துவத்தை வலிகளை
உன் கவிதைகளாகவும்
சில கதைகளாகவும்!
என் நாட்குறிப்பை
நானே விமர்சிக்கும்
உணர்வோடு பதிவு செய்கிறேன்
என் பின்னூட்டங்களை
உன் பதிவுகளில்!
அனைத்தும் கற்பனை
என்று நீ கூறினால்
அதன் உண்மை என் வாழ்வு!
ஆயிரம் வேறுபாடுகள்
இருந்தாலும் நாம்
இருவரும் யன்னலின்
கம்பியை பிடித்திருகிறோம்
ஒரே வானத்தை பார்த்தபடி!
வாழ்கை மிக
சுவாரசியமானது
என்றே தோன்றுகிறது!
நீயும் இதை
வழிமொழிவாய் என்றே
உணர்கிறேன்!
அறிமுகம் ஏதுமில்லை
இருப்பினும் உனக்காய்
ஒரு பதிவு
அழகான அனுபவமாய்
உருமாறும்
நேற்றைய கண்ணீராய்
தினசரி பதிவு செய்கிறாய்
என் தனிமையை
தனித்துவத்தை வலிகளை
உன் கவிதைகளாகவும்
சில கதைகளாகவும்!
என் நாட்குறிப்பை
நானே விமர்சிக்கும்
உணர்வோடு பதிவு செய்கிறேன்
என் பின்னூட்டங்களை
உன் பதிவுகளில்!
அனைத்தும் கற்பனை
என்று நீ கூறினால்
அதன் உண்மை என் வாழ்வு!
ஆயிரம் வேறுபாடுகள்
இருந்தாலும் நாம்
இருவரும் யன்னலின்
கம்பியை பிடித்திருகிறோம்
ஒரே வானத்தை பார்த்தபடி!
வாழ்கை மிக
சுவாரசியமானது
என்றே தோன்றுகிறது!
நீயும் இதை
வழிமொழிவாய் என்றே
உணர்கிறேன்!
5 comments:
ஆஹா! ஏற்கனவே வந்திருக்கேன் லக்ஷ்மண் உங்க பதிவுக்கு.. இனி அடிக்கடி வரனும்னு தோணுது! சுயம் கவிதை வெகு அருமை! :)
எனக்கா இந்த கவிதை? எதிர்பாக்கல லக்ஷ்மண்.. உங்க எழுத்தாளுமை நல்லா இருக்கு.. கவிதைகளுக்குன்னு இன்னொரு தளம் அறிமுகமானதுல ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு! நன்றி.
மிக்க நன்றி காயத்திரி. தங்களின் பினூட்டங்களுக்கும் புரிதலுக்கும்.
ஆம். உண்மைதான் காயத்திரி.
வாழ்வின் சில நிகழ்வுகள் ஏன் என்றே
புரிவதில்லை.
மனது புரிந்துகொள்ள விழைவதும் இல்லை.
ஒரு புல்லாங்குழல் தொடர்ந்து ஊதப்படும் சப்தம் மட்டும் கேட்டுகொண்டே இருக்கிறது.
//ஆயிரம் வேறுபாடுகள்
இருந்தாலும் நாம்
இருவரும் ஒரே யன்னலின்
கம்பியை பிடித்திருகிறோம்
ஒரே வானத்தை பார்த்தபடி!//
nice
thanks sree
Post a Comment