Thursday, August 23, 2007

(மின்)அஞ்சல் பெட்டி


அழகிழந்து
கிழிந்து
பயன்பாடற்று
தெருவோர குப்பையில் வீழ்ந்த
அந்த கைப்பைய்யில்
பணம் தேடும் ஒரு பிச்சையின்
விரல்கள் எப்பொழுதும்
மறப்பதில்லை
முன் ஒரு நாளில்
கிடைத்த ஒற்றை ரூபாயையும்
அது தந்த மகிழ்சியையும்!

Tuesday, August 21, 2007

உறக்கம் தொலைத்தல்


கனனியில் கோளாறு
தட்டச்சு பிழை
தொலைகாட்சியில் சிதறிய கவனம்
உணர்வுகளின் ஆதிக்கம்
ஆண்டவனின் திருவிளையாடல்
தமிழை மறந்த இழி நிலை
காரணமே இல்லாத அவசரம்!
அறைந்து கொண்டே இருக்கிறது
முன்பு ஒரு கவிதையில்
'அரை'கதவாகிய 'அறை'கதவு








Sunday, August 19, 2007

தன்னிலை விளக்கம்


முகம் பார்ததில்லை
அறிமுகம் ஏதுமில்லை
இருப்பினும் உனக்காய்
ஒரு பதிவு

அழகான அனுபவமாய்
உருமாறும்
நேற்றைய கண்ணீராய்
தினசரி பதிவு செய்கிறாய்
என் தனிமையை
தனித்துவத்தை வலிகளை
உன் கவிதைகளாகவும்
சில கதைகளாகவும்!


என் நாட்குறிப்பை
நானே விமர்சிக்கும்
உணர்வோடு ப‌திவு செய்கிறேன்
என் பின்னூட்ட‌ங்க‌ளை
உன் ப‌திவுக‌ளில்!

அனைத்தும் க‌ற்ப‌னை
என்று நீ கூறினால்
அத‌ன் உண்மை என் வாழ்வு!

ஆயிர‌ம் வேறுபாடுக‌ள்
இருந்தாலும் நாம்
இருவரும் யன்ன‌லின்
க‌ம்பியை பிடித்திருகிறோம்
ஒரே வான‌த்தை பார்த்தப‌‌டி!

வாழ்கை மிக‌
சுவார‌சிய‌மான‌து
என்றே தோன்றுகிறது!
நீயும் இதை
வ‌ழிமொழிவாய் என்றே
உண‌ர்கிறேன்!

Friday, August 17, 2007

சுயம்



யாவரும் பார்க்க‌
நிகழும் வல்லுறவின்
வலியோடு
தன் சுயம்
இருப்பு அடையாள‌ங்க‌ள்
எல்லாம் இழந்து
சிலையாகி இறந்தது
ஒரு கல்!

நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த‌ த‌டையும் இல்லை!

Monday, August 13, 2007

யாரோ


சற்று முன்
நொடி பொழுதில்
யாரோ திறந்து மூடிய
என் அறைக்கதவு
சப்தமாய் சிரித்தது
என்னுள் நிராகரிப்பின்
வலியுணர்த்தி!

Saturday, August 11, 2007

ஓய்வு நேரங்களில்..


உயிரறும் வலியோடு
விக்கித்த‌வித்த‌ அன்றைய பொழுதில்
உணர்வுகள் முழுதும் உன் பெய‌ர்!


த‌ண்ணீர் குவளை‌யோடு
அவச‌ர‌மாக‌ வ‌ந்தாய்
உன் ஒய்வு நேர‌த்தில்.
எல்லாம் முடிந்தும்
மீண்டும் விக்கினேன்
உன் அன்பிற்காக‌!

ம‌ன்றாடினேன் ஆண்ட‌வ‌னிடம்
இனியேனும்
என் தாக‌ங்க‌ள்
உன் ஓய்வு நேர‌த்தில்
வர‌வேண்டும் என்று.

த‌ன் இருப்பை உண‌ர்த்திய‌ப‌டி
உள் ந‌க‌ர்ந்த‌து
முள் ஒத்த ஓர் உருவ‌ம்!

கண்டிப்பாக தெரியும்

இந்த வரி(லி)க‌ளை
நீ ப‌டிப்பாய் என்று
கண்கள் பனித்தபடி
உன் ம‌ற்றுமொறு
ஓய்வு நேர‌த்தில்!