Monday, January 7, 2008

பருவங்கள்



கசக்கியெறியப்பட்ட
அந்த தேதியை
மெதுவாய்
பிரித்து பார்க்கிறது
பிஞ்சு விரல்கள்

உள்ளிருக்கும்
நிகழ்வுகளின் குரூரங்கள்
நினைவில் வர
பயந்துப்
பதறி தடுக்க முனைந்தேன்

சிறு கோடுகள்
சில எண்கள்
ஒரு மகிழ்ச்சி
குழந்தையின் கண்களில்
வேறெதுவும் புலப்படவில்லை

வாழ்வியல் எதார்த்தமென
கடந்த காலத்தில்
மற்றொரு துர்நாளில்
அந்த குழந்தை
கசக்கி எறியப்பட்டது
இந்தத் தேதியைப்போல
என்னிலிருந்து

3 comments:

காயத்ரி சித்தார்த் said...

அருமை!!

M.Rishan Shareef said...

பால்யத்தைத் தொலைக்கும் பாஷை அற்புதமாக வெளிப்பட்டிருக்கிறது.

LakshmanaRaja said...

மிக நன்றி காயத்திரி மற்றும் எம்.ரிஷான் ஷெரீப்