Tuesday, December 18, 2007

புரிதலின் மௌனங்கள்


என்னை உணர்ந்தும்
சூழலால் மௌனித்திருப்பதன்
உன் நியாயங்கள்..
அனைத்தும் அறிந்தும்
நான் உன் வார்த்தைகளுக்காய் காத்திருப்பதிலும் இருக்கிறது


அவசரமாயும் அவசியமாயும்
என்ன இருக்கிறது
உடன் பகிர
பிரிவின் வெறுமையை தவிர!


கழுத்தில்
அலுவலக அடையாளங்கள்....
கனம் தாளாது
தொங்கும் தலையை
யாரும் அப்படித்தான் அறிவார்கள்…

தனைஉணர யாருமற்ற வீதியில்
நேர்கொண்டு பார்க்க ஏதுமில்லை


நம் புரிதலின் முன்
விலகி நின்று
விளக்கிச்சொல்ல
ஏதுமின்றி தவிக்கிறது
கவிதை

6 comments:

காயத்ரி சித்தார்த் said...

//அவசரமாயும் அவசியமாயும்
என்ன இருக்கிறது
உடன் பகிர
பிரிவின் வெறுமையை தவிர!
//

அருமை லக்ஷ்மண்!

LakshmanaRaja said...

மிக நன்றி காயத்ரி

M.Rishan Shareef said...

எனது தனிமையையும்,தவிப்பையும் அப்படியே சொல்வது போன்றதொரு அற்புதமான கவிதை.வாழ்த்துக்கள் நண்பரே...!

LakshmanaRaja said...

மிக நன்றி நண்பா

Dreamzz said...

//நம் புரிதலின் முன்
விலகி நின்று
விளக்கிச்சொல்ல
ஏதுமின்றி தவிக்கிறது
கவிதை//
wow!

LakshmanaRaja said...

thanks dreamz