Wednesday, December 26, 2007

உன் பதில் நோக்கிய பொழுதுகளில்


தொடரும் கருச்சிதைவுகள்
இடைநிறுத்தி
உன் நிமிடங்களின் அவசரத்தோடு
குருதி வாசம் மேலெழ
என் அன்பின் உணர்வுகள் பிரசவிக்கிறேன்

மனப்பிறழ்வின் பிதற்றலென
இரக்கத்தின் அமிலம் தெளித்து
மௌனமாய்
எழுந்து
விலகி
என் விழிதிசை நடக்கிறாய்
வெறும் அழகியல் வெளிப்பாடுகளோடு

பிணமான குழந்தைகளின்
விரல் நுனி காலிடற
உடல் கூசி உயிர் தகிக்கிறேன்
எதோ எல்லாம்
புதிதாய் நடப்பதாக.

5 comments:

காஞ்சனை said...

நிராக‌ரிப்பின் வ‌லியை இவ்வ‌ள‌வு வ‌ன்ம‌ம் மிகுந்த‌ வார்த்தைக‌ளால் சொல்ல‌ முடியுமா?

கவிதையின் கடைசி வரியை படித்து விட்டு தலைப்பைப் படித்தால் நன்றாக விளங்குகிறது.

- சகாரா.

Rasiga said...

\\பிணமான குழந்தைகளின்
விரல் நுனி காலிடற
உடல் கூசி உயிர் தகிக்கிறேன்\\

கண்களில் எட்டிப் பார்த்த நீர் துளிகளை ஏனோ கட்டுப்படுத்த விடவில்லை இவ்வரிகள்.

LakshmanaRaja said...

அன்பு தங்கையே வருகைக்கு மகிழ்ச்சி.

ரசிகாவிற்கு : உணர்தலுக்கு நன்றி

Dreamzz said...

nalla kavidhai.. aazhamai sogamai..

LakshmanaRaja said...

மிக நன்றி dreams