Monday, November 26, 2007

இலக்கணத்தோடு பேசுகிறாய்


காத்திருப்பின் எல்லா
வலிகளையும் அர்த்தமற்று
செய்த ஓர் கட்டாயத்தின் வளைவில்
நீண்ட நாட்களுக்கு பிறகு
என் தனிமை உன்னோடு பயணிக்கிறது
தலைகுனிந்தபடி

விழி அவிழ்ந்த
அன்பின் வலிநிறம்பிய வார்த்தைகளை
ஓர் நோயின் அறிகுறியென விமர்சித்து ஒதுங்கி நின்று பின் சில உபாயங்கள் சொல்கிறாய்
பயனற்ற உன் மருந்துகளொடு வீடு திரும்புகையில் நோயாளியானேன் நான்


தன் பசிக்கு கேள்விக்குறிகளை தின்று
உடல் பெருத்த ஓர் முற்றுப்புள்ளியை மிக எளிதாக நீயிட
கேள்விகள் உருகுலைந்து வாக்கியங்கள் ஆனதும் இனி இதற்கெப்படி பதிலளிக்கவென இலக்கணம் பேசுகிறாய்
நீ எதுவும் பேசலாம்
பதிலளிக்க அன்பும் பதில்மறுக்க அறிவாளித்தனுமும் போதுமாயிற்றே

எல்லாம் செய்தும் உனை கருவாக்கி
சுமக்கிறது தாய்மையோடு என் கவிதை
உள்ளிருந்து உதைத்தளை பெருமிதத்தோடு
ஊருக்கு உரைத்தபடி.

3 comments:

காஞ்சனை said...

எதார்த்தத்தின் வலியோடு பூத்த கவிதைக்குள்,

//நீ எதுவும் பேசலாம்
பதிலளிக்க அன்பும் பதில்மறுக்க அறிவாளித்தனுமும் போதுமாயிற்றே//

'நச்'சென்றிருக்கிறது இந்த வரி.

LakshmanaRaja said...

மிக சரியான புரிதல்

'நவிரன்' சதீஷ் - 'Naveran' Sathish said...

\\
தன் பசிக்கு கேள்விக்குறிகளை தின்று
உடல் பெருத்த ஓர் முற்றுப்புள்ளியை மிக எளிதாக நீயிட
கேள்விகள் உருகுலைந்து வாக்கியங்கள் ஆனதும் இனி இதற்கெப்படி பதிலளிக்கவென இலக்கணம் பேசுகிறாய்
\\

அபாரமான வர்ணனை!! வியக்கவைக்கிறது உங்களின் கவிதைகள்!