Sunday, November 11, 2007

என் உலகத்தின் நான்கு சுவர்கள்!





எவ்வகை இச்சையோடும் பொழுதைபோக்க
யாராக இருந்தாலும் இந்த
திரையரங்கிற்குள் நுழையத்தகுதியாய்
அன்பான சில வார்த்தைகள் போதுமாதலால்
நெரிசல் அதிகமிருக்கும்!கவனம் தேவை!!

நிலையாய் இருப்பது கடினமான
கழிப்பறையில் கழிவை நீக்கி
புத்துணர்வோடு வெளியேறும் பொழுது
விட்டுச்செல்வது அசிங்கமானாலும்
அவையும் ஒரு வகை அடையாளமே!

தேவையறிந்து இன்னபிற உருவமேற்கும்
இந்த நான்கு சுவருக்குள்
விருப்பம் நிறைவேறியதும்
சொல்லியும் சொல்லாமலும் பிரியலாம் நீங்கள்!
வழிதவறி வந்ததாகவும்
நேரமின்மையென்றும்
காரணங்கள் அதுவாகவே பதிவாகிவிடும்!

என் அறைதான் என்றாலும்
விட்டுச்சென்ற எச்சங்களினிடையே
நான் மட்டும் மிச்சமாய் இருப்பது
வலிமிகுந்த இரவுகளை தவறாமல்
தந்துச்செல்கிறது உங்கள் நினைவாய்!

தனித்தே இருந்தாலும்
கண்ணினுள்ளேயே
தங்குகிறது ஒரு நீர்த்துளி
வெளியேறுவது தவறென்றறிந்து!

வாயிலில் தொங்கும்
'நன்றி.மீண்டும் வருக'
அர்த்தத்தோடும் அர்த்தமற்றும்!

2 comments:

M.Rishan Shareef said...

திரையரங்கு பற்றிய அருமையான ஒரு கவிதை.
ஒளித்து ஒளித்துச்செல்லும் சிறுவயது ஞாபகங்கள்...
வாலிபமுறுக்கோடு விசிலடித்துக்கலையும் ஞாபகங்கள்...
சோகங்களின் வலி விழிகளில் பிழிந்து விசும்பிய மெல்லிய மனதுடையோரின் ஞாபகங்கள்...
திரையில் தோன்றும் நாயகர்களாய் தன்னைச் சித்தரித்துக்கொண்டு சண்டை போட்ட ஞாபகங்களென எத்தனை ஞாபகங்களைத்தான் திரையரங்க இருட்டுச்சுவர்கள் தன்னுள்ளே புதைத்து வைத்திருக்கும்?
ஓர் பொழுதிலிவை பேசுமானால் எத்தனை காவியங்கள் உயிரெடுக்கும்...?!!!
கவிதை அருமை நண்பரே...!

LakshmanaRaja said...

மண்ணிக்கனும் நண்பா. இது என் அறை பற்றியதும் தனிமையை பற்றியதும்.. திரைஅரங்கை பற்றியது இல்லை..