Sunday, June 3, 2007

காத்திருப்பு


அகதியாகும்
பயத்தோடு இனியும்
மறுப்பதற்கில்லை
உனக்கான சுதந்திரத்தை!


இனிவரும் நாட்களில்
அந்த அகதியின் கூட்டுக்குள்
பறவையாக மாறாலாம்
நான்! நம் உற‌வின் மகிமை
பற்றி அன்று
பேசலாம்
கிளைகளில் அமர்ந்தபடி!

என் சிற‌குகள்
திருடபட்டவை அல்ல‌!
கைதவறி என்னிடம் சேர்ந்ததும் அல்ல‌!
வரமாக வந்தவை என்று நான் சொன்னாலும்
உன்னை தேவதை ஆக்கியது நான் அல்ல!

நம் காத்திருப்பின் பகிர்தலில்
தன் இருப்பை உணர்த்த
ஓடி களைத்து தலை சுற்றி விழுந்து
உடைந்த உன் கைகடிகாரத்தின் முட்களை
கவனிக்க அங்கு யாரும் இல்லை!
நமக்கும் அக்கறையில்லை!
உடைந்த சப்தம் மட்டும் பரிதாபமாய்!

நம் உறவை அளவெடுக்க‌
தேடப்படும் அளவுகோல்
தொலைந்தே ஒழியட்டும் என்று
சாப‌த்தை வரமாக‌ பெற்ற
நம் பிரிவின் தவத்தை வியந்து நன்றி தெரிவிப்போம்
அன்று!

5 comments:

Unknown said...

என் சிற‌குகள்
திருடபட்டவை அல்ல‌!
கைதவறி என்னிடம் சேர்ந்ததும் அல்ல‌!

I really don knw for whom u r waiting..anyways tht waiting period makes u a good poet... u knw hw to organise words.... anyways i wish the person u r waiting for shd come to u soon;)

LakshmanaRaja said...

thanks dear.thanks for your wishes.

Unknown said...

நல்ல கற்பனை!! மிகவும் பொருத்த்மான நல்ல வார்த்தைகள்!!

Keep it up!!

With Love, Senthil Alagu .P.

மஞ்சூர் ராசா said...

ஆரம்பம் சரியாக கொண்டு சென்று முடிவில் குழம்பிவிட்டீர்களோ என ஒரு தோணல்.

நம் உறவை அளவெடுக்க‌
தேடப்படும் அளவுகோள்

= அளவுக்கோல்

LakshmanaRaja said...

நன்றி நண்பரே!பிழைகள் சுட்டி காட்டியமைக்கு நன்றி