யாவரும் பார்க்க
நிகழும் வல்லுறவின்
வலியோடு
தன் சுயம்
இருப்பு அடையாளங்கள்
எல்லாம் இழந்து
சிலையாகி இறந்தது
ஒரு கல்!
நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த தடையும் இல்லை!
நீங்கள் யாரும் அதை
அழகென்று கொண்டாட
எந்த தடையும் இல்லை!
எந்த தேவையோடும் இனி யாரும் என்னை தேட வேண்டாம்! ஆழ்ந்த சிந்தனைக்கு பிறகு முடிவு செய்து விட்டேன் நானே என்னை தேடி கொள்வதாக!
5 comments:
சிலையாகி உயிர்ப்பெற்றது என நேர்மறையாகவும் சிந்திக்கலாமே நண்பரே...
கல்லாக பிறந்த என்னை கல்லாகவே வாழவிடுங்களேன் என்ற ஏக்கம் தான் நண்பரே!
இந்த கவிதை என் வாழ்வியலின் நிலை உணர்த்தளாகவே பதிவு செய்தேன்!
சுயம் அற்று வாழ்தல் எதற்கு?
நல்லாயிருக்கு......
மிகவும் நன்றி நண்பரே..
"யாவரும் பார்க்க
நிகழும் வல்லுறவின்
வலியோடு..."
நல்ல - கொடுமையான உவமை. சுயம் அழிந்து வாழ்தலே நமக்கெல்லாம் என்றிருக்கையில் கல்லை என்ன சொல்ல...? வித்தியாசமாகச் சிந்தித்திருக்கிறீர்கள்.
Post a Comment